அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 178 பேர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், இதுவரை 23,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான 5,986 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஏழு கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தினம் மரணங்கள் பதிவாகவில்லை.

Be the first to comment

Leave a Reply