மரடோனாவின் மரணம் தொடர்பில் மருத்துவரிடம் விசாரணை

அர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் முன்னாள் ஜாம்பவான் டிகோ மரடோனாவின் மரணம் தொடர்பில் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மரடோனாவின் மரணத்தில் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும் பொறுப்புள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அறுவை சிகிச்சையின் பின்னர் மரடோனாவின் உடல்நிலை தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லையா என்பதை அறிய அவரின் புவனொஸ் அயர்ஸ் வாசஸ்தலம் மற்றும் டொக்டர் லியோபொல்டோ லுக்’கின் மருத்துவ கூடம் என்பன பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

டிகோ மரடோனா மாரடைப்பினால் 60 ஆவது வயதில் தனது வீட்டில் காலமானார்.

மூளையில் காணப்பட்ட கட்டியை அகற்றுவதற்காக கடந்த மாதம் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Be the first to comment

Leave a Reply