யாழிலிருந்து மேற்கொள்ளப்படவிருந்த பாரிய கடத்தல்!

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கரவெட்டியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் மற்றும் அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான குழுவினரே இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர். சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

சான்றுப்பொருட்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply