கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 503 பேரில் 147 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

அதன்படி ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 340 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 6ஆயிரத்து 265 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 41பேர், களுத்துறை மாவட்டத்தில் 28 பேர், அம்பாறை மாவட்டத்தில் 28 பேர், இரத்தினபுரி மாவட் டத்தில் 25 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேர், குருணாகல் மாவட்டத்தில் 10 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களனி பிரதேசத்தில் 06 பேர், கேகாலை மாவட்டத்தில் 02 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 02 பேர், மாத்தளை மாவட்டத்தில் 02 பேர் மற்றும் கண்டி மாவட்டத்தில் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07 பேர் ,  மேலும் 36 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply