மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 8 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளதுடன், காயமடைந்த கைதிகள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்தவர்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவரும் அடங்குவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply