இலங்கையில் இந்துக்களை அச்சுறுத்தும் இராணுவம்! அதி உச்ச அடக்குமுறை

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக் கட்சியின் செயலாளரும் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழர்கள் கார்த்திகை தீப திருநாளை அனுஷ்டித்த போது இராணுவத்தினர் பல இடங்களிலும் சமய அனுஷ்டானங்களை செய்யவிடாது தடுத்தமைக்கு எதிராகவே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி, தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறையே”

இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, இலங்கையில் சமய, கலாச்சார நிகழ்வுகளை சிறுபாண்மையினர் அச்சமின்றி கடைப்பிடிக்கும் சூழல் ஏற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply