பெண்ணொருவரின் அந்தரங்க வீடியோவை வைத்து 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்த இரு காமுகர்கள் சிக்கினர்!

பெண்ணொருவரின் நிர்வாண வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவதாக மிரட்டி, அவரை 4 வருடங்களாக பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நிட்டம்புவ பொலிசாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் கடந்த 26ஆம் திகதி அத்தனகல்ல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். டிசம்பர் 8ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் தலங்கம பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இளம் தாய் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்தார். பின்னர், தனது நண்பர்கள் இருவரிடம் அந்த வீடியோவை ஒப்படைததார்.

அந்த வீடியோவை பெற்ற நண்பர்கள் இருவரும், அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர் தமக்கு ஒத்துழைக்காவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் நிட்டம்புவ பொலிசார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply