அம்மாவிடம் செலவுக்கு பணம் கேட்டு தராததால் மனவிரக்த்யில் தூக்கில் தொங்கிய யாழ் இளைஞன்!

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (29) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் தாயாரிடம் பணம் கேட்டதாகவும் தாய் பணம் கொடுக்க மறுத்துள்ளதால் கோபமடைந்து தனது அம்மம்மாவின் வீட்டிற்கு சென்று அங்கு அறைக்குள் தூக்கில் தொங்கியுள்ளார்.

மகன் கோபமடைந்ததை புரிந்து கொண்ட தாய் தனது தாய் வீட்டிற்கு மகனை தேடி போயுள்ளார்.

அப்போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து குறித்த இளைஞனை மீட்டு வரணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில்

அங்கு அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் வரணி கரம்பைக் குறிச்சியை சேர்ந்த மகேந்திரம் தினோஜன் (வயது – 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply