கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்

அத்தியாவசிய தேவைகள் இன்றி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் மூலம் மேல் மாகாணத்தையே சார்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு நகரிலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கு சென்றவர்களே வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்படுகின்றனர். இதனூடாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய வைரஸ் தொற்றாளர்கள் உருவாகுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply