கால்பந்தாட்ட மைதானத்தில் புதையுண்ட நிலையில் வெடிகுண்டுகள் மீட்பு -இத்தாலியில் பரபரப்பு

கால்பந்தாட்ட மைதானத்திற்கு கீழே புதையுண்ட நிலையில் வெடி குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்றிருந்த 1940களில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. முசோலினியின் அதிகாரித்திலிருந்த இத்தாலி மீது பிரிட்டன் விமானப் படைகள் குண்டுகளை பொழிந்தன. இவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் பல இன்னமும் கண்டறியப்படாமல் உள்ளன. கட்டுமானப்பணிகளின்போது அடிக்கடி சில வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் இத்தாலியில் உள்ள ரோமா பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெடிகுண்டு போன்ற பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அறிந்து மைதானத்திற்கு விரைந்த இத்தாலி ராணுவம் மைதானம் முழுவதும் சோதனை மேற்கொண்டு 20 வெடிகுண்டுகளை தோண்டி எடுத்துள்ளனர். இவை யாவும் இரண்டாம் உலக போர் சமயத்தில் இத்தாலியின் மீது வீசப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply