தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை விடுவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகள் மற் றும் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் பிரிவுகள் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, கொழும்பு கரையோரம் மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரி வுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.

அத்தோடு, கம்பஹா மாவட்டத்தில் ராகமை மற்றும் நீர் கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப் பட்டிருந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு நீக்கப் பட்டது.

இருப்பினும், மட்டக்குலியா பொலிஸ் பிரிவிலும், பெர் குசன் சாலையில் உள்ள தெற்குப் பகுதியிலும், வெல்லம் பிட்டியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்சந்தா சேவனா வீட் டுத் திட்டத்திலும், சலாமுல்லா மற்றும் விஜயபுரா கிராம சேகவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் முகத்துவாரம், புளுமென்டல், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம்வீதி, வாழைத்தோட்டம், ஆகிய பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாலிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளும், கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம உத்தியோகஸ்தர் பிரிவும் பொரளை பொ லிஸ் பிரிவில் வானாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும்.

கம்பாஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை மற் றும் களனி ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனி மைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரும்வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாகவே காணப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply