நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் நேற்றைய தினம் மேலும் 07 பேர் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித் துள்ளது.

அதன்படி, கொழும்பு 02 சேர்ந்த 50 வயதான பெண் ஒரு வர், கொத்தட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் , மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் , அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த 51 வயதான பெண் ஒரு வர், கொழும்பு13 சேர்ந்த 90 வயதான பெண் ஒருவர், மருதனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப் படடுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

01. கொழும்பு 02 சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொ ரோனா தொற்று மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோயால் 2020 நவம்பர் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. கொத்தட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற் றும் நாட்பட்ட நுரையீரல் நோயால் வீட்டிலேயே 2020 நவம் பர் 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

03. மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 நவம்பர் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

04. சிலாபம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா தொற்றால் 2020 நவம்பர் 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

05.அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த 51 வயதான பெண் ஒரு வர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நாட்பட்ட நீரிழிவு நோயுடன் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 நவம்பர் 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

06.கொழும்பு13சேர்ந்த 90 வயதான பெண் ஒருவர் கொ ரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2020 நவம்பர் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

07. மருதனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்று மற்றும் நுரையீரல் செய லிழந்தமையால் வைத்தியசாலையில் அனு மதிக்கப் பட்ட போது 2020 நவம்பர் 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply