அட்டன் டன்பார் தோட்டத்தில் சுயதனிமையிலிருந்த ஒன்பது பேரில் ஒருவர் உயிரிழந்தார்

அட்டன் டன்பார் தோட்டத்தில் சுயதனிமையிலிருந்த ஒன்பது பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பகமுவ கொரோனா தடுப்பு சுகாதர பிரிவு அதிகாரி பி.தேவன் தெரிவித்தார்.

ஒரு பிள்ளையான தாயான 84 வயதுடைய வயோதிபப்பெண் ஒருவரே நேற்று மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

இவரின் பேரப்பிள்ளை கொழும்பு பம்பலபிட்டி பகுதியிலிருந்து வருகைத்தந்திருந்த நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந் நிலையில் குறித்த வயோதிபபொண் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அட்டன் விசேட மரண விசாரணை அதிகாரி எ.ஜே.எம். பஷீர் முஹமட் உயிரிழந்த நபரின் பி.சி. ஆர் பரிசோதணையின் பின்னர் பிரதேச பரிசோதனைக்கு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்குமாறு அட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த வீட்டிலுள்ள ஏனைய எட்டு பேருக்கும் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அம்பகமுவ கொரோனா தடுப்பு சுகாதார பிரிவு அதிகாரி பி.தேவன் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply