மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது டிப்பறை ஏற்றி கொலை

குருநாகல் – கொபேய்கனை – ஹாத்தலவ பிரதசத்தில் தெதுருஓயவில் இடம்பெறும் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர்,

மணல் வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்ற போது, ஐந்து காவற்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த இடத்துக்கு சென்றுள்ளது.

இதன்போது குறித்த கான்ஸ்டபிள் மீது டிப்பர் ரக வாகனத்தை ஏற்றி அவரை கொலை செய்துவிட்டு, அதன் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply