வவுனியாவில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார். பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

வவுனியாவிலும் மாவீரர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி முதல் வவுனியாவின் சில பகுதிகளில் பொலிஸாரின் கெடுபிடிகள் காணப்பட்டபோதும் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்ததினமான நேற்றும் இன்றும் பல பகுதிகளில் மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக வவுனியாவில் 1379வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட இடம், பொங்கு தமிழ் நினைவுத் தூபி, தோணிக்கல் பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அரவிந்தன் என்பவரின் வர்த்தக நிலையத்திற்கு முன் மற்றும் ஆலயங்கள், ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டிய பகுதிகள் என பரவலாக பொலிஸாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதுடன், அப்பகுதிகளுக்கு வந்து செல்வோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் புலனாய்வாளர்களின் பிரசன்னமும் அதிகரித்து காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply