ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர எதிர்வரும் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் விளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர, உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரின் பிணை மனுக்கள், கம்பஹா மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதி நிமல் ரணவீர இதனை அறிவித்தார்.

வழங்கப்பட்ட பிணை தொடர்பான தீர்ப்பு அடுத்த மாதம் 7 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கம்பஹா உயர் நீதி மன்ற நீதிபதி நிமல் ரணவீர நேற்றைய தினம் அறி வித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply