மேலும் 559 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 559 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 553 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 06 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 028 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 369 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 816ஆக அதிகரித் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6ஆயிரத்து 113 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 650பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 99பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply