வவுனியாவில் பன்றி இறைச்சி சாப்பிட்ட சிறுவன் திடீர் மரணம்!

வவுனியாவில் பன்றி இறைச்சி சாப்பிட்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சபவத்தில் வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய தம்பனையை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரியபண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் மூச்சு திணறிய நிலையில் சிறுவன் ஒருவன் அவசரமாக சிகிச்சைக்கு கொண்டுவந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

இதனையடுத்து மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிறுவன் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் நேற்றையதினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பன்றி இறைச்சி சாப்பிட்டதால்தான் மூச்சு திணறல் ஏற்பட்டது என குடும்பத்தாரால் சொல்லப்பட்ட நிலையில், குறித்த சிறுவன் விஷம் அருந்தியுள்ளார் என்ற தகவல்களும் கசிந்துள்ளது.

எனினும் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை கிடைக்க பெற்ற பின்னரே சிறுவன் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply