கிளிநொச்சிக்கு பேரூந்தில் இருமியபடியே வந்த பெண்ணுக்கு கொரோனா!

கிளிநொச்சி திருவையாறில் நடந்த ஒரு மரண வீட்டுக்காக, கொழும்பில் இருந்து பஸ் மூலமாக ஒரு பெண் வந்துள்ளார்.

குறித்த இவர் பஸ்சிலேயே இருமியபடி தான் இருந்தார் என்று கூறப்படுகிறது. பின்னர் அவர் மரண வீட்டில் கலந்து கொண்ட பின்னர் நிலமை மோசமானதால், யாழ் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

அத்துடன் மரண வீட்டில் கலந்து கொண்ட மேலும் 2 வருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பஸ்சில் குறித்த பெண்ணுக்கு அருகில் இருந்த நபர்கள் யார் யார் என்று பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply