வரவுசெலவு திட்ட விவாதத்தின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி mp கஜேந்திரன் அவர்களின் அதிரடி பேச்சு

20/11/20 வரவுசெலவு திட்ட விவாதத்தின் போது மாவீரர்களுக்கு அஞ்சலியுடன் தனது உரையை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு செல்வராஜா கஜேந்திரன்

தமிழ் தேசத்தை இனப்படுகொலை மூலம் அழித்த ராஜபக்ச இன்று நிதியமைச்சராக இருந்து மீண்டும் தமிழர்களை பொருளாதார ரீதியில் ஒடுக்கும் திட்டத்திலேயே இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்திருக்கிறார்.தமிழர் தேச நலன் சார்ந்த விடயங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.போராள் பாதிக்கப்பட்ட மக்களுக்கானவாழ்வாதார மீட்பு திட்டம் எதுவும் இல்லை. குறிப்பாக முன்னாள் போராளிகள் அங்கவீனந்தமடைந்த போராளிகள் மக்கள், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட போராளிகள் மக்களிற்கான திட்டங்கள் எதுவும் இல்லை .
சிங்களவர்களின் ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் தமிழ் தேசத்து மீனவர்களுக்கான உதவிகள் இல்லை
தமிழ் தேச விவசாயிகளுக்கான உதவிகள் இல்லை
வர்த்தகத்தில் முன்னணியில் இருந்த தமிழ் வர்த்தகர்களை ஒடுக்கி இன்று அந்த இடத்தை சிங்களவ்ர்களுக்கு கொடுக்க எத்தனிக்கிறது சிறிலங்கா அரசு!
தமிழர் தேசத்தை சமதரப்பாக அங்கீகரித்து இயங்காத வரை இந்த தீவில் நிரந்தர அபிவிருத்தி என்பது சாத்தியமற்றதே

Be the first to comment

Leave a Reply