மண்டைதீவில் துயரம்: வயல் குட்டையில் விழுந்து சகோதரச் சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

மண்டைதீவில் துயரம்: வயல் குட்டையில் விழுந்து சகோதரச் சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

யாழ். மண்டைதீவு பகுதி வயல் குட்டை ஒன்றில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மண்டைதீவு பகுதியில் உள்ள குறித்த பகுதியில் அமைந்திருந்த வயல் காணியில் வெட்டப்பட்டிருந்த குழியில் அண்மையில் பெய்த மழை நீர் தேங்கி நிறைந்து காணப்பட்டுள்ளது.

குறித்த வயல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்களான் இரு சிறுவர்களும் மழை நீர் நிறைந்து காணப்பட்ட குழியினுள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இத்துயரச் சம்பவத்தில் இராசகுமார் சர்வின் (வயது-07) மற்றும் இராசகுமார் மெர்வின் (வயது-04) ஆகிய சகோதரர்கள் இருவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களது சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன

Be the first to comment

Leave a Reply