ஒரே ஒரு பீட்ஸாவால் முடக்கப்பட்ட நாடு

ஒரே ஒரு பீட்ஸாவால் முடக்கப்பட்ட நாடு…..

தெற்கு அவுஸ்திரேலிய தலைநகரான Adelaide என்ற நகரில் உள்ள பீட்ஸா கடை ஒன்றில் தான் பீட்ஸா வாங்கியதால் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் பீட்சா பெட்டியிலிருந்து கொரோனா பரவியதாக கூஙியுள்ளார்.

கொரோனா இதுபோல் பெட்டியைத் தொடுவது மூலம் எல்லாம் பரவாது என்பதால், இந்த கொரோனா வைரஸ் புதிய பயங்கரமான ஒன்றாக இருக்குமோ என சுகாதார அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தெற்கு அவுஸ்திரேலியா முடக்கப்பட்டது, அலுவலகங்கள் மூடப்பட்டன, தொழில்கள் மீண்டும் நிறுத்தப்பட்டன, மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

இந்நிலையில் அந்த நபர் பீட்ஸா கடையில் வேலை செய்பவர் என்பதும், அவர் ஏற்கனவே கொரோனா தாக்கிய ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொய் சொல்லி தெற்கு அவுஸ்திரேலியாவையே முடக்க வைத்த அந்த நபர் 36 வயது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்.

அவர் தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியா வந்தவர், அவரது விசா அடுத்த மாதம் காலாவதியாகிறது.

அவர் பொய் குற்றச்சாட்டை முன்வைத்மைக்கான காரணம் வெளியாகவில்லை.

இந்நிலையில், காரணமின்றி நாட்டை முடக்கி, தங்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால் மக்கள் அந்த நபர் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஆறு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறு நாட்டை முடக்கியதன் பின்னணியில் ஏதேனும் குற்றச்செயல் இருக்குமா என பொலிசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்

Be the first to comment

Leave a Reply