ஆர்ஜென்டினாவில் ஜனாதிபதிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

ஆர்ஜென்டினாவின் (Argentina)  ஜனாதிபதியான அல்பர்டோ பெர்ணான்டஸுக்கு (Alberto Fernández ) எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டில், கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பியுனோஸ் எரிஸ் நகரின் வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கானோர், தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி, அல்பர்டோ பெர்ணான்டஸுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply