மேல் மாகாணத்தில் மேலும் 260 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

மேல் மாகாணத்தில் 260 பொலிஸ் அதிகாரிகள் கொரோ னா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள தாக மேல் மாகாண பொலிஸ் அலுவலகம் தெரிவித் துள்ளது.

இந்நிலையில் இவர்களில் 06 பேர் குணமடைந்துள்ளனர் அத்துடன் 254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 355 ஆகவும், சுய தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண் ணிக்கை 1484 ஆகவும் உயர்ந்துள்ளது.

அத்துடன் இதுவரை 27 பேர் வீடு திரும்பியுள்ளனர், சுய தனிமைப்படுத்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 1457 என மேல் மாகாண பொலிஸ் அலுவலகம் தெரிவித் துள்ளது.

Be the first to comment

Leave a Reply