பிரான்ஸின் நிலைமை என்ன? ‘உள்ளிருப்பு’ நடவடிக்கை கொரோனா பரவலைக் குறைத்துள்ளறதா?

பிரான்ஸில் வரும் நாட்களில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்படுவோர் தொகையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் தொகையும் மிக அதிகமாகும் என பிரான்ஸ் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் இவ்வாறு அமையும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததாக சுகாதார அமைச்சர் Olivier Véran நேற்று France Inter வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இப்பொழுது அதிகரித்துச் சென்றாலும் அது சிறிது சிறிதாக குறைவடைந்து வருகின்றது.

இதற்கு உள்ளிருப்பு நடவடிக்கையே முக்கியகாரணம்.

ஆனால் வரும் நாட்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் தொகை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வைத்தியசாலைகளில் இப்பொழுது கொரோனா தொற்று நோயாளிகளுக்கு என அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் வேறு நோய்கள் காரணமாக மருத்துவ தேவைகளுக்கென வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களின் வயது எல்லை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாகக் கருத்துகள் பரவியுள்ளன.

கொரோனா தொற்றாளர்கள் வயதானவர்களாக இருக்கும் பட்சத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாமல் இருப்பதாக நாடளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகின்றது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலைகளிலுமிருந்து ஒருவரையும் தாங்கள் திருப்பி அனுப்பப்போவதில்லை என்றும் இதுவரை அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது பிரான்சில் உள்ள வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 6,400 படுக்கைகள் உள்ளன.

அவற்றில் 4410 படுக்கைகள் கொரோனா தொற்றாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply