அமெரிக்கா: கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகர் கிங் வான் உட்பட மூவர் பலி

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரப் பாடகர் கிங் வான் (King Von) உட்பட 3 மூவர் உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

டேவோன் பென்னட்  என்ற இயற்பெயர் கொண்ட 26 வயது கிங் வான், தனது நண்பர்களுடன் கிளப் ஒன்றிற்கு சென்றிருந்த போது, அங்கு மற்றொரு குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தகராறு முற்றி இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply