நடிகர் ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்?

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய திரையுலகில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் தமிழிலும் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில்  தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க விரும்புவதாக ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப்படங்களை படங்களை இயக்கிய லிங்குசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியதாவது: ரஜினிகாந்த் அவர்களை வைத்து இதுவரை நான் படம் எதுவும் இயக்கவில்லை. ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.

ஏனெனில் நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது ஸ்டைல் நடிப்பு எல்லாம் எனக்கு மிகவும்  பிடிக்கும். இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ரஜினியின்  வேடத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும்.

அதேபோல் ரஜினியின் ஸ்டைலும் தனுஷூக்கு நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ரஜினி ஒப்புதல் தருவாரா? அதில் தனுஷ் நடிக்க விருப்பப்படுவாரா? லிங்குசாமியின் ஆசை நிறைவேறும? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply