ராகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு கொரோனா

ராகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரி ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 98 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply