வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு கொரோனா தொற்று

வெலிக்கடை சிறைச்சாலையில் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆண் கைதிகள் இருவர், அதிகாரி ஒருவர் மற்றும் பெண் சந்தேக நபர்கள் நால்வருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் அனைத்து சந்தேக நபர்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply