ஆனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விபத்தில் உயிரிழப்பு

ஆனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

கொட்டுக்கச்சி பகுதியிலுள்ள பண்ணையிலிருந்து அனுமதியின்றி மாடுகளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த லொறியை பின்தொடர்ந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

லொறியை பின்தொடர்ந்து பயணித்த போது, குறித்த பொறுப்பதிகாரியின் வாகனம் மணிக்கூட்டு கோபுரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்ற இந்த விபத்தில் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் சிகிச்சைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply