வீடொன்றிற்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

வீடொன்றிற்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை – உயன்வத்தை – தர்மரத்ன மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள்ளே இந்த பயங்கர கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி முதல் 67 வயதுடைய குறித்த பெண்ணின் நடமாட்டம் இல்லாத நிலையில் அயலவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அவரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போது குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply