ரொம்ப குண்டா இருந்தார்.. அதான் டீமை விட்டு தூக்கிட்டாங்க.. இந்திய வைஸ் கேப்டனுக்கே இதுதான் கதி!

ரோஹித் சர்மா நீக்கப்பட்ட விவகாரத்தில் பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹன். அவர் விராட் கோலி உடற்தகுதிக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி அதனால் தான் ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்.

ரோஹித் சர்மா லாக்டவுனுக்கு பின் உடல் எடை அதிகமாகி விட்டார். இதை ரசிகர்கள் கூட ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் கிண்டல் செய்தனர். ஆனால், விராட் கோலி இந்திய அணியில் சிக்ஸ் பேக் வைக்காவிட்டாலும் ஃபிட்டான உடல் கொண்டவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கி வருகிறார்.

அந்த வகையில் ரோஹித் சர்மா குண்டான உடலுடன் இருப்பதால் காயத்தை காரணமாக வைத்து அவரை அணியை விட்டே நீக்கி இருக்கலாம் எனக் கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் மைக்கேல் வாஹன். அணியின் துணை கேப்டனையே இப்படி ஒரு காரணத்துக்காக நீக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சனை துவங்கிய இடம் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணித் தேர்வு தான். ஐபிஎல் தொடரில் காயத்தில் சிக்கி ஓய்வில் இருந்த ரோஹித் சர்மாவை அதே காயத்தை காரணமாகக் கூடி டிசம்பர், ஜனவரியில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டது வியப்பை அளித்தது.

தனது காயம் பெரிதாக இல்லை என மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்தார் ரோஹித் சர்மா. ஆனாலும், பிசிசிஐ அதிகாரிகள் அவரது காயம் மோசமாக இருப்பதாக கூறினர். கங்குலி கூட அதை உறுதி செய்யும் வகையில் பேட்டி அளித்தார்.

அனால், ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலேயே தன் காயத்தில் இருந்து மீண்டு போட்டியில் பங்கேற்றார். அதனால் பெரும் பரபரப்பு எழுந்தது, அவரது காயத்தால் போட்டியில் பங்கேற்கவே முடியாது என கூறி வந்த பிசிசிஐ பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டது.

இந்த நிலையில் ரோஹித் சர்மா நீக்கப்பட அவரது உடல் எடை தான் காரணம் என புதிய கோணத்தை பற்றி கூறி அதிர வைத்துள்ளார் மைக்கேல் வாஹன். அவர் கூறுகையில், விராட் கோலி தன் அணியில் உடற்தகுதியுடன் இருக்கும் வீரர்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார்.

அதனால் உடல் எடை அதிகமாகி விட்ட ரோஹித் சர்மாவை அவர் அணியில் தேர்வு செய்யாமல் போயிருக்கலாம். அவரது நீக்கத்துக்கான உண்மையான காரணத்தை பிசிசிஐ தெளிவு படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது உண்மையாக இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது. இதே ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து ரிஷப் பண்ட் உடல் எடையை காரணம் காட்டி நீக்கப்பட்டுள்ளார். அந்த உதாரணம் இருப்பதால் ரோஹித் சர்மா நீக்கத்துக்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

Be the first to comment

Leave a Reply