அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகில் திடீர் தாக்குதல்! ஐவர் படுகாயம் – அலறியடித்த மக்கள்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மக்களை மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

எனினும் இந்தக் கத்திகுத்து தாக்குதலில் பெண்ணொருவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து பொலிஸார் படுகாயமடைந்த நபர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தலைநகர் வோஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply