மருந்துகளை விநியோகிக்க விசேட தபால் சேவை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அரச வைத்தியசாலைகளிலிருந்து மருந்துகளை விநியோகிக்கும் விசேட நடவடிக்கை தபால் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தபால்களை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோக நடவடிக்கையை சுகாதார திணைக்களம், சுகாதார அமைச்சுடன் இணைந்து தபால் திணைக்களமும் வெற்றிகரமாக முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை தவிர ஓய்வூதியம் உள்ளிட்ட தபால் அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் பயனாளர்களுக்கு வழங்குவதற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தபால் மா அதிபர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply