திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்…!

இந்தியா சினிமாவில் முக்கிய பிரபலமான நடிகர் பாலாசிங் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணிக்ககும்போது, அவருக்கு வயது 67.

நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின. மளையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். அந்த வகையில் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, இவரை குடும்பத்தினர் வடபழனியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், நடிகர் பாலாசிங்கின் மரணம் திரையுலகினரிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Be the first to comment

Leave a Reply