கொரோனாவை ஒழிக்க கடலுக்கு பலியாக நான் தயார் , பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு

நான் கடலுக்கு பலியானால் கொரோனா தொற்றை நாட்டிலிருந்து ஒழிக்க முடியுமாயின், அதற்கும் நான் தயார் என இன்று பாராளுமன்றத்தில் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

மருத்துவ கட்டளை சட்டத்தின் கீழ் கட்டளைகள் சிலவற்றை சமர்ப்பித்து இந்த விடயங்களை குறிப்பிட்டார். கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு சுகாதார அமைச்சர் கடலுக்கு பலியாவது பொருத்தமானது என சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் பதிவுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென குற்றம் சாட்டியுள்ளார் .

Be the first to comment

Leave a Reply