அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படம்..!

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட உள்ளதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தைக்கு இன்று முற்பகல் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அமைய, மொத்த விற்பனையாளர்களுக்கு அரியை விநியோகிக்க முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply