மட்டக்களப்பு வெல்லாவெளியில் வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆணைக்கட்டி வெளி வயல் காணி ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாகிமகசீன் 15 ,ரவைகள் 373; மகசீன் பாக் ஒன்று என்பன நேற்று திங்கட்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மேட்டுநில காணியில் பயிரிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை (02) காணி உரிமையாளர் ஒருவர் மாடுகளால் உழும் நடவடிக்கையிளை மேற்கொண்ட போது நிலத்தில் புதைதத்து வைக்கப்பட்டிருந்து இரு பொதிகள் வெளிவந்துள்ளதையடுத்து பொலிசாருக்கு தெரியப்ப டுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் சென்று அந்த பொதியை சோதனையிட்டபோது அதிலிருந்து ரி56 ரக துப்பாகி மகசீன் 15, ரவைகள் 373, மகசீன் பாக் ஒன்றை மீட்டனர். இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply