“யாழ்.மாநகரம் முடக்கப்படும்” – முதல்வர் ஆனோல்ட் கடுமையான எச்சரிக்கை

யாழ்.நகரப் பகுதியில் கொவிட் -19 நிலமைகள் மோசமடைந்தால், நகரத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இறுக்கமான சூழ்நிலை ஏற்படாதவாறு வர்த்தகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இதன்போது முதல்வர் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 மிக மோசமடைவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்டத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் தொடர்பாக, இன்றும் மத்திய அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply