நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் பதிவாகியது

நாட்டில் 22 ஆவது கொரோனா மரணம் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

பாணந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 31 ஆம் திகதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாகவும் பிரேத பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டமையும் தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply