யாழ்.பல்கலைகழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார்!

யாழ்.பல்கலைகழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பல்கலைகழக ஆங்கிலத்துறை விரிவுரையாளரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த விரிவுரையாளர் நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஹோட்டல் உரிமையாளருடைய மகனின் மனைவி என கூறப்படுகின்றது.

அத்துடன் கொரோனாத் தொற்றுக்குள்ளான நபரின் மகன் நல்லூர் வீரகாளி அம்மன் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீட்டுக்கு சென்று வந்ததாக தெரியவருகிறது.

இந்நிலையில் மகனின் குடும்பமும் தனிமைப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விரிவுரையாளர் உட்பட்ட குடும்பத்தாருக்கு கொரோனாத் தொற்று இல்லை. என முடிவு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் குறித்த குடும்பத்தினை தொடர்ந்தும் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply