தென்னிலங்கையிலிருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ள நாமலின் செயலாளர் உள்ளிட்ட அணியால் அச்சம்!

கொழும்பில் இருந்து வருகைதந்த நாமல் ராஜபக்சவின் செயலாளர் உட்பட நால்வர் வவுனியாவில் நடமாடித்திரிகின்றனர் என வவுனியாவில் இன்று இடம்பெற்ற கொரனா தொடர்பான கலந்துரையாடலில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதார திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இளைஞர் சேவைகள் மன்றத்தில் அபாய வலயமான கொழும்பில் இருந்து வந்த சிலர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் நாம் அங்கு சென்று பார்த்தபோது நாமல் ராஜபக்சவின் செயலாளர் மற்றும் நால்வர் தங்கியுள்ளனர்.

அவர்களிடம் கேட்டபோது அவர்கள் வவுனியாவில் சிலரை சந்திக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.

அதில் பிரதேச செயலாளர் உட்பட்ட அதிகாரிகள் உள்ளனர் என தெரிவித்ததுடன் தாம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வவுனியாவில் சந்தித்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதால் தாம் அதிகளவில் அழுத்தமாக எதனையும் கூற முடியாமல் உள்ளதாகவும் குறித்த அதிகாரி கூட்டத்தில் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply