அதிகாரங்கள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் – கரு ஜெயசூரிய விடுத்துள்ள கோரிக்கை

தனக்கு கிடைத்துள்ள அதிகாரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

20ஆவது திருத்தத்தின் பின் இலங்கையில் மிகவும் வலுவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் இருப்பதால் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் 20ஆவது திருத்தத்தை எதிர்த்தாலும் அதன் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களை ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும்.

நாட்டு மக்களினது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அவரது கடமை.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

Be the first to comment

Leave a Reply