பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கெளதமை மணந்தார்

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் நேற்று (30) திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழில் கடைசியாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் – படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தப் படம் OTT-இல் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தொழிலதிபர் கெளதம் கிச்லுவை நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார் காஜல் அகர்வால்.
மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply