ஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் 4 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

ஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொவிட் 19 ஐ தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊடகத் துறை அமைச்சின் அலுவலக அதிகாரிகள் இருவர், மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடைய முதற்கட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply