கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பின்னடைவை சந்தித்துள்ளது: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

நாட்டுக்குள் பரவியுள்ள கொரோனா அலையை கட்டுப்படுத்தும் செயற்பாடு பின்னடைவை அடைந்துள்ளது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.

பழுதடைந்த பி.சி.ஆர்.இயந்திரங்களை உடனடியாக திருத்துதல் மற்றும் புதிய பி.சி.ஆர்.இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் செயற்பாட்டை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கக் கபருத்துத் தரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டுக்குள் பரவியுள்ள கொரோனா அலையை கட்டுப்படுத்தும் செயற்பாடு பின்னடைவை அடைந்துள்ளது.

நாட்டிலுள்ள பி.சி.ஆர்.இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ளமையே இதற்கான காரணமாக கருதப்படுகிறது. இந்த பி.சி.ஆர்.இயந்திரங்கள் தரமானவையாக எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இவை பழுதானால், அதனை திருத்தும் தொழில்நுட்பமும் ஆட்களும் இலங்கையில் இல்லாதமை பெரும் இழப்பாக காணப்படுகிறது.

இதனால், நாட்டு மக்கள் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். சுகாதார சேவையில் ஆட்பலமும் குறைந்துள்ளது.

எனவே, பி.சி.ஆர்.இயந்திரங்களை துரிதமாக திருத்துவதும், புதிய பி.சி.ஆர்.இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதும் அத்தியாவசியமாக காணப்படுகிறது.

இதனை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு நபரையும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளாது, அரசாங்கம் இந்த பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply