நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் நம்பிக்கை தரும் விதத்தில்லை-பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டின் கொரோனாவைரஸ் நிலவரம் நம்பிக்கை தரும் விதத்தில் இல்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கொரோனா வைரஸ்நிலவரம் சாதகமானதாகயில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்புமாநகரசபை எல்லைக்குள் பல நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்,என தெரிவித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல் ரோகண கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த கரிசனைகள் உருவாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாவது மூன்று நாட்களுக்கு மேல் தாமதமாகியுள்ளது இது குறித்து கேள்வி எழுப்பிவேளையே பிசிஆர் சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளமை தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பாக செயற்பட்டு;க்கொண்டிருந்த இயந்திரமொன்று தற்போது பழுதடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார.

கொழும்பு மாநகரசபைக்குள் பலர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் அவர்களை சோதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பது கடினமாக காணப்படுகின்றது,குறிப்பாக மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளில் இந்த நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply