ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு!

இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள நட்புறவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு F-35 ரக விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான எஃப் 35 ரக விமானங்களை அரபு நாடுகளுக்கு விற்பனை செய்ய இஸ்ரேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

இந் நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் நட்புறவு இருப்பதால் அந்நாட்டுக்கு போர் விமானங்களை விற்க இஸ்ரேல் எதிர்ப்புக் கூறவில்லை.

இதையடுத்து குறிப்பிட்ட விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Be the first to comment

Leave a Reply