பிரான்ஸில் உச்சபட்ச பதற்றம் படையினர் பெருமளவில் குவிப்பு -துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டில் இன்று பயங்கரவாதிகளால் கொடூரமாக மூவர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் வீதியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிகையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மையமாக வைத்து அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கடந்த 16-ம் திகதி சாமுவேல் பெடி என்ற வரலாற்று ஆசிரியர் பயங்கரவாதியால் தலைதுண்டித்து கொல்லப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் அந்நாட்டின் நைஸ் நகரில் உள்ள நோட்ரி டேமி என்ற கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த பயங்கரவாதி அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தினான்.

பயங்கரவாதியின் இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஒரு பெண் தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.இந்த தாக்குதலையடுத்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Be the first to comment

Leave a Reply