பல பகுதிகளில் மழை பெய்யும், பனிமூட்டம் நிறைந்து காணப்படும்

ஊவா, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டையிலும் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமென்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று காலைப் பொழுதில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply